top of page

சனாதனம் ஆரம்பித்ததே இவர்களிடமிருந்துதான்...

சனாதனதர்மம்: மனு வர்க்கம் யாவும் அடங்கி நடக்க வேண்டிய மாறாத அல்லது மாற்ற முடியாத சட்டக் கோட்பாடு. 2% மக்கள் தொகை மட்டுமே உள்ள உயர் ஜாதி இந்துக்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்து வைத்த பல சாதி கோட்பாடுகளால் பாரத நாட்டின் சொந்தக்காரர்களாகிய இந்து அல்லாத மற்ற பெரும்பான்மையின மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஈன வழக்கம்


வர்ணாசிரமம்: சனாதன தர்மத்தின்படி பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படும் ஒரு மனிதனின் சமுதாய சார்பு. தோலின் நிறம் மற்றும் தொழில் அடிப்படையில் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிராமணர்களால் தாழ்ந்த ஜாதிகளாக பிரித்தாளும் யுக்தி.


கிபி 30. பாலஸ்தீன தேசத்தில் சமாரியா என்னும் ஒரு மாகாணம். யூதேயாவுக்கு அடுத்தது. இங்கிருந்து கலிலேயாவுக்கு சமாரியாவைத் தாண்டிதான் போகவேண்டும். யூதர்கள் சமாரியாவினூடே சென்றால் சுருக்கம். ஆனால்,சமாரியாவுக்கு வெளியே சாலை அமைத்து சுற்றித்தான் போனார்கள். ஏன் தெரியுமா? யூதர்களுக்கு சமாரியர் தீண்டத்தகாதவர்கள். கீழ் ஜாதி. அவர்கள் கால் பட்ட இடம் கூட தீட்டாம். தாகத்துக்கு தண்ணீர் கூட அவர்களுடைய குடத்திலிருந்து வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.


இயேசு சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.


சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.


அந்தக் காலத்து சமாரியர்தான் கிமு எட்டாம் நூற்றாண்டில் அசீரியர்களால் சிதறடிக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்த இந்தக் காலத்து தலித்துகளும் சூத்திரர்களும். மா நிறத் தோல். கீழ் ஜாதி. பாரத நாட்டின் சொந்தக்காரர்களாகிய தமிழர் கருப்புத் தோல். ஆதிவாசிகளாகிய இவர்களும் கீழ் ஜாதி ஆக்கப்பட்டவர்களே. கிமு ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனியரால் சிதறடிக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்த யூதர்கள்தான் அயோத்தியாவை ((யோத்தா, யுத்தம்) மையமாகக் கொண்ட ஆரிய பிராமணர். வெள்ளைத் தோல் பிரித்தாளும் யுக்தி கொண்டு உலகத்தையும் சமுதாயத்தையும் தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ள தங்களை உயர் ஜாதி ஆக்கிக் கொண்டவர்கள். வர்ணாசிரமம்!


பின்னொருமுறை இயேசு ஒரு உவமையை சொன்னார்:: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.


பக்கமாய் விலகிப் போன இந்த ஆசாரியன் இன்று ஆச்சாரம் பார்க்கும் பிராமண அர்ச்சகர்களே. இந்த லேவியன் இன்று கோயிலுக்குள் அர்ச்சனைக்கு உதவி செய்யும் ஐய்யர்களும் அய்யங்காரர்களுமே. சாகக் கிடந்தவனின் உயிரைக் காப்பாற்றியவனோ தீண்டத் தகாத சமாரியன். SC கோட்டாவில் இடஒதுக்கீடு பெற்று வாழ்வில் முன்னேறி வந்த டாக்டரோ?


நூற்றுக்கு அதிபதி ஒருவனுடைய வேலைக்காரன் கொடிய வியாதிப் பட்டிருந்தான். இயேசுகிறிஸ்து அவனை தூரத்திலிருந்தே சுகமாக்க அதிகாரம் உடையவர் என்று விசுவாச அறிக்கை செய்த பொழுது, கர்த்தர் அதைப் பாராட்டினார். சுகமாக்கினார். இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று வியந்தார்.


இயேசு ஒருமுறை பத்து குஷ்டரோகிகளை சுகமாக்கினார். ஒருவன் மட்டுமே நன்றி சொல்ல திரும்பி வந்தான். சமாரியனாகிய அவனை அவர் மெச்சிக்கொண்டார். சுகம் பெற்ற மற்றவர்கள் யூதர்கள். நன்றிகெட்டவர்கள்.


இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் சீமோன் என்னும் பேருள்ள கருப்புத் தோல் நிறமுடைய தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட கானானியன் ஒருவன் இருந்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதே இயேசு ஒரு கானானிய பெண்மணியின் விசுவாசத்தை மெச்சிப் பாராட்டினார் மட்டுமல்ல, அவளுடைய மகளின் சுகவீனத்தையும் நீக்கினார் என்பதினால் அவர் வர்ணாசிரம தருமத்துக்கு(?) எதிரானவரே என்பதையும் நமக்கு உணர்த்துகிறார் அல்லவா?


இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்த ரோம ஆளுநர் பிலாத்துவின் வீட்டிற்குள் சென்றால் தீட்டு என்று வெளியே நின்றவர்கள் யூதர்களும் அவர்களின் ஆசாரியர்களுமே.


இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பின்பு நாற்பது நாட்கள் தம் சீடர்களுக்கு பலமுறை தரிசனமானார். தான் பரமேறிப்போகும் முன் திரும்பி வருவேன் என்று வாக்குப் பண்ணினார். பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு சற்று முன் தம் சீடர்களிடம் சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று கட்டளையிட்டார், மனுஷருக்குள் ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்று கற்றுக்கொடுத்தவர் இயேசு.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரமேறிப் போன பின்னர், அவருடைய சீடர்களில் ஒருவரான பிலிப்பு சமாரியாவிலே நற்செய்தி சொல்லப் போனான். அனேகர் விசுவாசித்து இயேசுவே ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டார்கள். சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் தீண்டாமையை ஒழிப்பவர்களே.


இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். யூதன் அல்ல. புறஜாதியான். அவன் தெய்வாதீனமாக தன் சேவகரை அனுப்பி இயேசுவின் சீடனாகிய பேதுருவை அழைப்பித்தான். அப்பொழுது பேதுரு அவர்களை வீட்டினுள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே என்று பிரசங்கித்தான்.


முன்பு தீவிர ஆச்சாரங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்த யூதனாக பெருமையாய் வலம்வந்த சவுல் என்பவன் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் சீஷனாக மாறினான். யூதரல்லாத புறஜாதி மக்களிடையே நற்செய்தி அறிவிக்கும் தனிப்பொறுப்பை அவனுக்கு இயேசு வழங்கினார். பவுல் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இவன் ஒருமுறை கிரேக்க நாட்டு அத்தேனே பட்டணத்துக்கு வந்தான், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.

ஒரு நாள் அங்கிருந்த மார்ஸ் மேடையிலிருந்து, “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” என்றான்.


யூதர்களும் பிராமணர்களும் உயர் ஜாதியும் அல்ல. கிரேக்கர்கள் கீழ் ஜாதியினரும் அல்ல என்று பவுல் அன்றே அறுதியிட்டுக் கூறினான்.


இயேசுவானவர் தாம் சொன்னபடியே திரும்ப வருவார். தம்முடையவர்களை பரலோகத்தில் கூட்டிச் சேர்ப்பார். அதுவரை இவர்கள்: தேவரீர் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். கடவுளுடைய அரசில் ஜாதிப் பாகுபாடில்லை. நிற மொழி வேறுபாடில்லை. வர்ணாசிரமம் தருமமே இல்லை.


பாரதத்தில் குடிபுகுந்த 2% மக்கள் மட்டுமே திணிக்கும் இந்த சனாதனம் நிரந்தரமானது என்பது ஏற்புடையதல்ல. இந்நாட்டு குடிமக்களாகிய 98% மக்களால் மாற்றப்பட வேண்டியதே. சத்திய வேதத்தின் தேவன் கட்டளையிடுவதும் இதுவே.


85 views0 comments

Recent Posts

See All
bottom of page