top of page

விசேஷக் குறிப்புகள் (3)

இயேசுவால் சபிக்கப்பட்ட அத்திமரமாகிய இஸ்ரவேல்

இயேசுவால் சபிக்கப்பட்ட அத்திமரமாகிய இஸ்ரவேல் அவருடைய சாபத்தையும் மீறி ஒரு நாடாக (இளங்கிளை )1948ல் தோன்றி 1967ல் எருசலேமைத் தலைநகராக்க / துளிர்விட துணியும் காலமே முடிவுகாலம்.

இந்த இஸ்ரவேலாகிய இளங்கிளை தோன்றி (1948) துளிர்விடுவதைப் (1967) பார்க்கும் சந்ததி இந்த பூமியின் முடிவைக் காணும் என்று இயேசு முன்னுரைத்திருக்கிறார். ஒரு சந்ததி 60லிருந்து 80 வருடங்கள் இருக்கலாம்.

முடிவுகாலமாகிய சோதனைக்காலம் ஆரம்பிக்கும்பொழுது சாத்தான் தன்னுடைய அதளபாதாள சிறைக்காவலிலிருந்து கொஞ்சம்காலம் விடுவிக்கப்படுவான். அப்பொழுது மறுபடியும் வஞ்சிக்க ஆரம்பிப்பான். இது 1948லிருந்து 80 (பெலத்தின் மிகுதியால்) வருடங்களாகவோ, 1967லிருந்து 60 வருடங்களாகவோ இருக்கலாம். உலகின் பூர்வ மக்களாகிய தமிழர்களின்படி 60. 1948+80=2028 அல்லது 1967+60= கிபி 2027.

முடிவுகால / கடைசிகால சபையாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் சாத்தான் பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் தேவனுக்கு விரோதமாக (கோகு மாகோகு) மக்களை மோசம்போக்கிக் கூட்டுவான்.

முடிவுகால சபையினர் மிகவும் ஆவிக்குரியவர்களைப்போல் வேஷம் போடுவார்கள். ஆனால் இயேசுவை புறக்கணித்துவிடுவார்கள். சுருக்கென்று உலகத்தாரை உணர்த்தும்படியான வாழ்க்கை வாழமாட்டார்கள். கர்த்தரே வாந்திபண்ணிப்போடும் அளவுக்கு மோசம்!

கடைசிகால கிறிஸ்தவர்கள் விசுவாசதுரோகம் செய்வார்கள். கிறிஸ்து இயேசுவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். உண்மை விசுவாசிகளை துன்புறுத்தி, காட்டிக்கொடுத்து, மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். (கடைசி காலத்தில் விசுவாசத்தைக் காண்பாரோ?)

கடைசிகாலத்தில் இயேசுவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் வெகு சிலரே. மற்ற அனைத்து ‘விசுவாசி’களும் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறபடியால் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக தேவனே கொடிய வஞ்சகத்தைத் அவர்களுக்கு அனுப்புவார்.

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலித்து பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழும் இருமுறை செத்தவர்களின் பிணம் எங்கேயோ அங்கே மோசம்போக்கி வஞ்சகமாய் பட்சிக்கிறவர்கள் (கழுகுகள்) கூடுவார்கள். இதில் ‘கிறிஸ்தவ’ கள்ளப்போதகர்களும் உண்டு. அவர் அளிக்கும் பெரிய விருந்துக்கு இக்கழுகுகள் அழைக்கப்படுவார்கள்.

கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக சாத்தான் செய்யும் முயற்சிகளைக் கட்டுப்படுத்தும்படியாக இந்த சோதனைக்காலம் குறைக்கப்படும். கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார். 2027/28க்கு முன்னதாகவே?

பாழாக்கும் அருவருப்பாகிய அல் அக்ஸா ஸ்தாபிக்கப்பட்ட கி பி 688 முதல், ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் (வருஷம்) மட்டும் 688+1335 காத்திருந்து கிபி 2023ஐ சேருகிறவன் பாக்கியவான்.

மோசம்போனவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களையும் புதிய எருசலேமையும் வளைந்துகொள்வார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போடும்.

(உலகின் முதல் மொழியான தமிழின் வருடச் சக்கரம் 60 வருடங்கள். எனவேதான் தமிழர்களின் சஷ்டியபூர்த்தி அல்லது 60ஆம் பிறந்தநாள் 60ஆம் கல்யாணம் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழிலிருந்து தோன்றியதே புராதன மொழியான சமஸ்க்ரிதம். இதோ: வருடம், தமிழ்ப்பெயர், சமஸ்க்ரித மொழியாக்கம்: 2022-23, நற்செய்கை, சுபக்ருது; 2023-24, மங்கலம், சோபக்ருது; 2024-25, பகைக்கேடு (தேவ கோபாக்கினை?), க்ரோதி; 2025-26, உலகநிறைவு, விசுவாசுவ / விஸ்வ ஸ்வாஹா. ஐயையோ!).

மேலும் அறிந்துகொள்ள https://www.jesusreigns.in/revelation

bottom of page