top of page

முகவுரை

நல்ல காலம் பொறக்குதா?

நல்ல காலம் பொறக்குதா?

என்ன நடக்க போகிறது என்று அறிந்துகொள்வதில் நம் யாவருக்குமே ஆவல்தான். நம்மில் ஒருபுறத்தார் இப்பொழுது நாம் இருக்கும் நிலையினின்று நம் சூழ்நிலை மேம்படாதா? என்ற ஆதங்கத்தோடு வாழ்கிறோம். மறுபுறத்தில் நிற்போர், இப்பொழுதுள்ள வசதியான நம் நிலை எப்பொழுது மாறிவிடுமோ? என்ற பயத்தில் இருக்கிறோம். ஒரு சிறிய கூட்டம் எதையும்பற்றி கவலையற்றவர்கள் போல நடித்துக்கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உள்ளத்திலே ஒரு உறுத்தல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. என்ன நடக்குமோ?

ஆருடம், ஜோசியம், பஞ்சாங்கம், ஜாதகம், இராசிபலன், மருத்துவரின் பரிந்துரை இவை ஒருபுறம் தனிநபருக்கு எதிர்காலத்தை சொல்லும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்க, அறிவியலும் தொழில்நுட்பமும் மறுபுறத்தில் நம் பூமிக்கு இனி என்ன நடக்கும் என்று அறிவிக்க முயலுகின்றன. இவைகளையும் தாண்டி நாஸ்ற்றடாமஸ், பாபா வெங்கா போன்றோர் தங்கள் வாழ்நாள் காலத்தில் சொல்லிப்போயிருக்கிற தீர்க்கதரிசனங்கள் சில சரியாக நிறைவேறியுள்ளதால் அவர்கள் முன்னறிவித்த சம்பவங்கள் நடந்துவிடுமோ என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளூர பயமும் அனேகரை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக, நமக்கு எப்பொழுது சாவு வரும் என்றும் இந்த உலகத்தின் முடிவு எப்பொழுது வரும் என்றும் தெரிந்தால் அதற்கு ஏற்ப நாம் நம்முடைய வாழ்க்கையை திட்டமிடலாமே என்கிற எண்ணம்தான் நம்மை பகலும் இரவும் வாட்டி வதைக்கிறது.

சாவை தனிமனிதனாக வெல்லவும் உலக அழிவை கூட்டாக தகர்க்கவும் நாம் எடுக்காத முயற்சி இல்லை; கையாளாத யுக்தி இல்லை; பண்ணாத பரிகாரம் இல்லை; கும்பிடாத தெய்வம் இல்லை. போகாத கோயில் குளம் இல்லை; செய்யாத தருமம் இல்லை. இவ்வளவு செய்தும் தப்பித்துவிடுவோம் என்கிற நம்பிக்கை இன்னும் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் இன்னும் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறதாகத்தான் தெரிகிறது.

நீங்களும் இப்படிப்பட்ட தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு விரக்தி அடைந்தவரோ? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்கே!

bottom of page