top of page

இயேசுவின் வருகைக்கு முன்னே – இனிமேல்

மத்திய கிழக்கு நாடுகள் கடைசி நாட்களில் அதிமுக்கியத்துவம் பெறுபவையாக இருக்கும்.

மத்திய கிழக்கு நாடுகள் கடைசி நாட்களில் அதிமுக்கியத்துவம் பெறுபவையாக இருக்கும். இஸ்ரவேலும் சிரியா, ஜோர்டன், ஈரான், ஈராக், லெபனோன் போன்ற யூப்ரட்டீஸ் (புரட்டிப் போடும் வலிமைகொண்ட) நதியை சுற்றியுள்ள நாடுகளும் உலகத்தின் முடிவுக்கு நேரடி காரணமாக இருக்கும். மனுஷரில் மூன்றில் ஒரு பங்கை இந்த நாட்டினர் சடுதியாகவோ மெதுவாகவோ கொல்ல வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களோடு கிழக்கிலிருந்து சில நாடுகள் சேர்ந்துகொண்டு உலக அழிவுக்கு காரணமாக இருப்பார்கள். இந்தியாவும் சீனாவும் இவைகளில் இருக்கலாம். (இவர்கள் இராணுவம் அக்கினி (சிவப்பு), நீலம், கந்தக (மஞ்சள்) நிறமுடைய சீருடையுடையது). ஏவுகணைகளின் வல்லமை அக்கினியைக் கக்கும் அவைகளின் தலைகளிலும் வால்களிலும் இருக்கும். இவைகளனைத்தின் மத்தியிலும் மக்கள் தங்கள் விக்கிரகஆராதனையையும் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும் (கடவுளை விட்டுவிட்டு, பணம், செல்வம் போன்ற மற்றவைகளை நாடிப் போய்), தங்கள் களவுகளையும் விட்டு மனம்திரும்ப மாட்டார்கள்.

இயேசுவின் சாட்சிகளாக பூமியிலுள்ள அவருடைய சபை அவரை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெற்று, இரட்சிக்கப்பட்ட புறஜாதிகளாலும் யூதர்களாலும் ஆனதே. அவர்கள் எளிய வாழ்க்கைமுறையை பின்பற்றினவர்களாக உலகெங்கும் ஒலிவமரங்கள் போன்றும் விளக்குத் தண்டுகள் போன்றும் அவருக்கு சாட்சிகளாக சுவிசேஷம் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கி பி 1948/67க்குப் பிறகு இவர்கள் சாத்தானால் கொல்லப்படுவார்கள். இவர்களுடைய சவங்களை உலகமே வேடிக்கை பார்த்து, சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வார்கள்.

(1) கடைசிகால மிருகமும் (காலா, பீஸ்ட்?) அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமுமாகிய யூதர்கள் (வெள்ளையர்களான ஐரோப்பியர்களும் யூத பிராமணர்களாகிய ஆரியர்களும் இதில் உண்டு) மற்றும் இசுலாமிய ஜனம், (2) அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யு எஸ் ஏ USA) என்னும் கள்ளத்தீர்க்கதரிசியின் இராஜ்ஜியம், (3) இவர்களிருவரையும் ஆட்டிப் படைக்கும் சாத்தான், (4) சாத்தானைச் சேர்ந்த அவனோடு விழுந்துபோன தூதர்கூட்டம் (5) கடவுளுடைய ஆளுகைக்குப் பணியாத மனிதவர்க்கம், (6) பாதாளம் (grave) / கல்லறை – இவர்கள் யாவரையும் தேவ குமாரனாகிய இயேசுவும் அவருடைய ஆளுகையை பூமியிலே அமலாக்கும் அவருடைய விசுவாசிகளும் ஜெயித்து அதளபாதாளத்தில் (bottomless pit) தள்ளி, (7) கடைசி சத்துருவாகிய மரணத்தையும் தங்கள் காலின்கீழ் நசுக்கிப் போடும் வரை இயேசு பரலோகத்திலிருந்து பூமியிலே ஆளுகை செய்துகொண்டிருக்கிறார். அவர் அறியாமல் ஒன்றும் நடப்பதில்லை. அவர் அனுமதிக்காமல் எதுவும் நிகழ்வதில்லை.

bottom of page