top of page

அவிசுவாசிகளுக்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும்

இயேசுவைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.

ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனாகிய இயேசுவைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.

இயேசு வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். இதோ, மேகங்களுடனே வருகிறார்; வானத்தின் மேகங்கள்மேல் அவர் வருவதை கண்கள் யாவும் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.

தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா பாபிலோனாகிய மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்குவார். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்கிற USA யூஎஸ்ஏவாகும். பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அப்பாவி மக்களைப் பட்சிக்கிற வஞ்சகம் நிறைந்த, அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித மனுஷரின் இருப்பிடமான, குழப்பங்கள் நிறைந்த இந்த மகா பாபிலோன் விழும்! விழும்!

யூதர்களும் இசுலாமியர்களுமால் ஆன அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமாகிய மிருகம் பிடிக்கப்படும்; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியாகிய USA யு‌எஸ்‌ஏவும் பிடிக்கப்படும்; இரு கூட்டத்தாரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்படுவார்கள்.

பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான்.

அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

கடைசிகாலத்திலே பூமியெங்கும் பரம்பி பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், புதிய எருசலேமாகிய சபையையும் வளைந்துகொண்ட சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட கோகு மாகோகு என்னும் பெருந்திரள் மக்களை தேவனால் வானத்திலிருந்து இறங்கின அக்கினி பட்சித்துப்போடும். பூமியின் மனுஷரெல்லாரும் மரித்துப் போவார்கள்.

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிப்பார்கள். அப்பொழுது மரணமும் (சங்கார தூதனும்), பாதாளமும் (நோவா காலத்து ஜலப்பிரளையத்துக்கு முன்னான உலகத்தில், தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டதால் நித்திய சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று அந்தகாரத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தூதர்களும், எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அழைக்கப்படுகிற பாதாளத்தின் தூதனும்) அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள்.

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு காலத்து அவிசுவாசிகளாகிய, பாதாளத்தில் போய்சேர்ந்த மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் தேவனுக்குமுன்பாக திரும்பவும் உயிர்த்து நிற்பார்கள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள். இப்படி உயிர்த்த மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கவும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருவார். கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது நியாயத்தீர்ப்பு உண்டாகும். அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கு உக்கிரகோபாக்கினை வரும்.

சிருஷ்டிகர்த்தரை புறக்கணித்து சிருஷ்டியாகிய சாத்தானோடு சேர்ந்துகொண்டதால் விழுந்துபோன தூதர்களும் சிருஷ்டிகரை பணிந்துகொண்ட பரிசுத்தவான்களால் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு பிசாசானவன் தள்ளப்பட்ட அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவார்கள்.

யூதர்களும் இசுலாமியர்களுமால் ஆன அந்திகிறிஸ்துக்களின் இராஜ்ஜியமாகிய மிருகத்தையும், அவர்கள் நாட்டையும் பணிந்து, அவர்களின் வஞ்சனையான ஆவியின் கட்டுப்பாட்டுக்கு தங்களுடைய சிந்தையையும் செயல்களையும் மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தவனெவனோ, அவன் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

சபிக்கப்பட்டவர்களும், பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும், நாய்களும் (பாவ வாழ்க்கை வேண்டாம் என்று இயேசுவிடம் மனந்திரும்பி விட்டுவந்த அருவருப்பான பாவ வாழ்க்கைமுறைக்குப் பின்வாங்கித் திரும்பப் போனவர்களும்), கிறிஸ்துவைக்குறித்தும் அவர் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்படுகிற அனைவரும், இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.

ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். இது இரண்டாம் மரணம்.

bottom of page