top of page

விடு தலை, விடுதலை! விடுதலை?

விடு தலை, விடுதலை! விடுதலை?

மகாகவி எழுதின வார்தைகள் அல்ல இவை. (பாரதியார், விடுதலை! விடுதலை! விடுதலை! என்று பாடல் புனைந்தார்).

மக்களாகிய நாமனைவரும் நம்மைப் படைத்த இறைவனை எதிர்த்து ஓயாமல் எழுப்பும் போர்க்குரல்தான் “விடு தலை”; கொஞ்சம் புரியும்படியாக சொல்கிறேன்.

இறைவனே நம்மை உண்டாக்கியவர். அவருடைய மக்களாகிய நாம் அனைவரும், தன்னிறைவு அல்லது தற்சார்பு உடையவர்களாக அல்ல, அவரையே சார்ந்து வாழவேண்டும் என்பதே அவர் நமக்கு வகுத்த வழி. அவரே நமக்கு நன்மை தீமை இன்னது என்று அறிவுறித்தி, நன்மையை செய்து, தீமையை வெறுக்கும்படியான திறனையும் தருகிறவர்.

இறைவனின் படைப்பாக்கிய நாமோ, நமக்கு நாமே வாழ்வின் பாதையை வகுத்துக்கொள்ளலாம் என்று துணிந்து, தலையாகிய அவருடைய கட்டுக்குள்ளிருந்து நம்மை விடுத்துக்கொள்ள தீவிரிக்கிறோம். இறைவனையும் நம்மை ஆளும்படியாக அவர் நியமித்த அவருடைய மனிதஉருவாகிய ஈசனையும் நம்முடைய விரோதிகளாக ஆக்கிக்கொண்டோம். (பைபிளில் இயேசு என்று முன்னிருத்தப்படுகிற தேவகுமாரனை மகாகவி பாரதியாரும் ஈசன் என்று தம்முடைய 77வது பக்திப் பாடலில் குறிப்பிடுகிறார்). இந்த ராஜாவுக்கு எதிர்த்து கொந்தளித்து வீணானகாரியத்தை சிந்திக்கிறோம்.

பொதுமக்களாகிய நாம் மட்டுமல்ல, நம்மை ஆளுகைசெய்கிறவர்களும் அதிகாரிகளும் இந்த இறைவனுக்கு விரோதமான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த இறைவன் ஏன் நம்மை ஆளவேண்டும்? நாம் நம்மையே விடுதலை ஆக்கிக்கொள்ளுவோம் என்றும், நமக்கு நாமே வாழ வழி வகுத்துக்கொண்டு நம் விருப்பம்போல் வாழலாம் என்றும் எத்தனிக்கிறோம். விளைவு? அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ விரும்பும் நாம், தீமையை விளைவிக்கிறவர்களாக சண்டையையும் வேதனையையும் பிரிவினையையும் பெருக்கிக்கொண்டிருக்கிறோம். சாதி, மதம், மொழி, நிறம் மற்றும் சமுதாய, பொருளாதாரநிலை வேற்றுமைகள் நம்மை விடுதலை செய்யவில்லை, அடிமையாக்கி வைத்திருக்கின்றன. அழிவைநோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் தேடி அடைந்த விடுதலை மெய்விடுதலை தானா? இல்லவே இல்லை.

நம்மீது எல்லைகடந்து அன்பு செலுத்தும் இறைவன் நாம் நம்முடைய ஆணவத்திலே அழிந்துவிடக்கூடாது என்பதற்காக நமக்கு சொல்லும் அறிவுரையை கேட்போம்: “இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். இறைவனுக்கான பயபக்தி உங்களுக்கு உண்டாகட்டும். நீங்கள் செய்த அகம்பாவமிக்க உங்கள் செய்கைக்கு ஏற்ற தண்டனை அடைவீர்கள் என்று உணர்ந்து இந்த ஈசனாகிய ராஜாவுக்கு முன்பாக நடுக்கத்தோடே வாருங்கள். அவருடைய பாதத்திலே உங்களை அர்ப்பணியுங்கள்”.

ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனுஷர்நடுவில் மனு ஈசனாக வந்த தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சொல்லுவது என்ன?. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”.

இந்த இயேசு அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; இவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; இவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; இவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே இவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் இவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் இவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இவர்மேல் வந்தது; இவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; இறைவனோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் இவர்மேல் விழப்பண்ணினார். நம்முடைய இடத்திலே மாற்றாளாக இவர் மரித்தார். ஆனால் மரணத்தை ஜெயித்து மீண்டும் உயிரோடெழுந்தார். இவர் இறையுருவாயிற்றே!

“சிலுவையில் மரித்த இயேசு எனக்காகத்தான் தன்னுடைய உயிரையே நீத்தார்” என்று, அவரிடத்தில் யார் விசுவாசம் வைத்து மனம்திரும்பி வருகிறார்களோ அவர்களை அன்போடு அணைத்துக்கொள்கிறார். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்று சொல்லியிருக்கிறாரே.

பாவத்தின் தண்டனையாகிய நரகம் என்னும் நித்திய மரணத்தினின்று விடுதலை அளிக்கிறவர் இவரே. நாம் செய்த பாவங்களினால் வந்த சாபங்களிலிருந்து விடுதலை தருபவர் இவரே. பாவத்தின் கோர பிடியிலிருந்து ஒவ்வொருநாளும் விடுதலை அளிப்பவரும் இயேசு மட்டுமே. விரைவில் நம்மையெல்லாம் இந்த பொல்லாத பாவ உலகத்தினின்று விடுதலை செய்து நம்மை தன்னோடிருக்கும்படியாக கூட்டிசெல்ல திரும்பி வரப்போகிறவரும் இந்த ஈசனே.

இயேசு சொல்லுகிறார்: “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்”. அதாவது, அவரிடத்தில் வந்து தாகம் தீர்ந்தவர்கள், இந்த நற்செய்தியை மற்றவர்கள் பயன்படும்படியாக அறிவிப்பார்கள். கேட்பவர்களுக்கும் தாகம் தீரும். இப்படித்தான் இந்த செய்தியும் உங்களிடதிற்கு வந்துள்ளது.

இயேசுவை நம்பி வாருங்கள். மெய் விடுதலை பெறுங்கள்.

விடு தலை, விடுதலை! விடுதலை?
Topic
Gospel with Freedom theme
Category
Gospel
bottom of page