top of page

பைபிள் சொல்லும் கடவுள், மதங்களின் கடவுளல்ல

1. கடவுள் ஆவியாய் இருக்கிறார்; உடலில் அல்ல.
2. கடவுள் அரசாளுகிரார்; அவரது படைப்புகள் எல்லாவற்றிற்கும் மேலானவர் அவர்
3. கடவுள் தன் படைப்புகள் அனைத்திற்கும், இவ்வுலகிற்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே நோக்கம் உடையவர்.
4. கடவுள் தனது நோக்கத்தை நிறைவேற்ற ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளார் - அவருக்கு வேறொரு திட்டம் இல்லை
5. கடவுள் சுயசித்தம் உடையவர்; அவர் தனது வார்த்தையான பைபிளில் அதை வெளிப்படுத்தியுள்ளார்
6. மனிதன் தேவ சித்தத்தை அறிய அவருடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்
7. கடவுள் சர்வ வல்லவர்; அவர் தனது திட்டத்தின்படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார்
8. தேவன் ஆவியாயிருக்கிறார்; மனிதனின் இயற்கண்களால் அவரைப் பார்க்க முடியாது
9. கடவுளுக்கு மனைவி இல்லை, மனிதகுலத்தைப் போல் அவர் குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் இல்லை.
10. கடவுளை ஒரு சிலையாக வடிவமைக்கவோ, செதுக்கவோ அல்லது வரையவோ முடியாது
11. மக்கள் எதையும் கடவுளாக வணங்குவதற்கு கடவுள் ஒரு தூணிலோ அல்லது ஒரு துரும்பிலோ இல்லை
12. மனிதன், விலங்கு, பறவை அல்லது ஊர்வன போன்ற எதையும் மனிதன் வணங்குவதால் கடவுள் எரிச்சலடைக்கிறார்
13. எந்த ஒரு பாவியாகிய மனிதனையோ, தாயையோ, (அன்னையையோ) அம்மனையோ அல்லது பெற்றோரையோ வணங்குவதை தேவன் அங்கீகரிப்பதில்லை
14. தேவன் மனிதவர்க்கம் முழுவதையும் பாவமுள்ளவர்கள் என்று தீர்த்திருக்கிறார்; அவர்கள் தேவனுடைய மகிமையை இழந்துவிட்டவர்கள்
15. தேவன் அழியாதவர், தம்முடைய மகிமையை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.
16. தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் தன்னை மனிதவர்க்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார்
17. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுமையில் தேவன் மனிதவர்க்கத்தின் மத்தியில் வாசம்பண்ணினார்
18. அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கைத் தரத்தை இயேசு மூலம் தேவன் மனிதவர்க்கத்திற்குக் காண்பித்தார்
19. மனந்திரும்பும் இருதயத்தோடு தம்மிடம் வரும் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பதன் மூலம் தேவன் மனிதவர்க்கத்தைப் பரிசுத்தமாக்குகிறார்
20. மனிதனுக்கும் கடவுளுக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதானத்தைக் உண்டுபண்ணும் ஒரு செயலை தேவன் தாமே செய்து முடித்திருக்கிறார்
21. கடவுள்தான் எல்லா நன்மைகளுக்கும் காரணர்.
22. கடவுளுக்குப் எதிராளி இருக்கின்றான்; இந்த சாத்தான் முதலில் அவரது படைப்பாக அவருடன் இருந்தான்; ஆனால் பெருமையினால் தீயவன் ஆனான்
23. தேவன் சாத்தானை வானத்திலிருந்து தள்ளி விட்டார்; பிசாசு விழுந்தான்; மற்றும் அவனுடன் சேர்ந்து கடவுளுக்கு எதிராக கலகம் செய்த ஒரு கணிசமான எண்ணிக்கையிலான தீய தேவதூதர்களும் விழுந்தார்கள்
24. கடவுள் இருளையோ, தீமையையோ படைக்கவில்லை; ஒளி இல்லாததுதான் இருள்; நன்மையின் மாசுதான் தீமை
25. கடவுள் தூய்மையானவர், பாவத்தையும் தீமையையும் சகித்துக்கொள்ள மாட்டார்
26. தேவன் பாவத்தைக் கண்டனம் செய்து, மரணத்தையும் அவரிடமிருந்து நித்தியமாக பிரிவதையும் பாவத்திற்கான தண்டனையாக பிரகடனப்படுத்தியுள்ளார்
27. தேவன் தம்முடைய பரிசுத்தத்தை மீறுகிற அல்லது மாசுபடுத்தும் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார்
28. பாவங்களால் ஏற்படும் மரண தண்டனையிலிருந்து தேவன் மனிதகுலத்தை விடுவிக்கிறார்
29. தேவன் மனிதவர்க்கத்தை பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, மனிதனின் சுயாதீனத்தை மீட்டுக்கொடுக்கிறார்
30. இரட்சிப்பிற்காக தம்மிடம் வரும்போது தேவன் ஒரு மனிதனை நீதிமானாக அறிவிக்கிறார்
31. தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் ஆளுமையில் மனிதனுக்குள் இருக்க முடியும்
32. மனித கைகளால் ஆன ஆலயங்களில் தேவன் வாசம் செய்வதில்லை.
33. மனிதர்களுக்கும் அவரைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் எது நல்லது, எது தீமை என்பதை கடவுள் தீர்மானிக்கிறார்.
34. தீமையைத் தவிர்ப்பதற்கும் நீதியைச் செய்வதற்கும் தேவன் தொடர்ந்து திராணியை அளிக்கிறார்
35. கடவுள் எல்லாவற்றையும் அறிவார், மேலும் ஆரம்பத்திலிருந்தே அனைவரின் முடிவையும் எல்லாவற்றையும் அறிவார்
36. கடவுள் ஒருவரே ஞானமுள்ளவர்; மனிதனின் உலக ஞானத்தை பைத்தியமாக அவர் கருதுகிறார்
37. தேவன் தம்முடைய முன்னறிவினால் தேர்ந்தெடுத்து, பின்னர் அவர் தெரிந்துகொண்ட அனைவரையும் அழைக்கிறார், நீதிமான் ஆக்குகிறார், பரிசுத்தப்படுத்துகிறார், மகிமைப்படுத்துகிறார்.
38. கடவுள் எல்லாவற்றையும், ஒவ்வொரு மனிதனின் இருதயமும் கூட பார்க்கிறார்
39. கடவுள் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார், சுற்றுச்சூழல் அல்லது சுற்றுப்புறத்தால் பாதிக்கப்படாமல் எங்கும் நிறைந்திருக்கிறார்
40. கடவுள் அன்பாக இருக்கிறார்; அவர் தனது அன்பை பல்வேறு வழிகளில், முக்கியமாக, அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நிரூபித்துள்ளார்
41. கடவுள் பரிசுத்தமானவர், தனித்துவமானவர், அவரது படைப்பிலிருந்து வேறுபட்டவர் மற்றும் வித்தியாசமானவர்
42. கடவுளின் தூய்மையை மனிதனின் பிரசன்னம், உணர்தல் அல்லது அவரிடம் அணுகுவதின் மூலம் சிதைக்க முடியாது
43. தேவன் ஒளியாயிருக்கிறார்; அவர் தன்னை வெளிப்படுத்த வெளிப்புற ஒளி தேவையில்லை
44. கடவுள் பொய் சொல்லவும் மாட்டார், ஏமாற்றவும் மாட்டார், பாசாங்குத்தனம் செய்ய மாட்டார்.
45. கடவுள் மட்டுமே சத்தியம் / உண்மை; வேறு எதுவும் உண்மை அல்ல.
46. கடவுள்தான் ஜீவன்; அவர் வாழ்வை வழங்குகிறார், வாழ்க்கையை நிலைநிறுத்துகிறார், எனவே, உயிரை பறிக்கவும் அவருக்கு உரிமை உண்டு
47. தேவன் தம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை அளிக்கிறார்
48. கடவுள் விளையாட்டுத்தனமானவர் அல்ல, வேடிக்கைக்காக எதுவும் செய்வதில்லை
49. தேவன் ஒரு நீதியான பாதையை வெறுமனே சிபாரிசு செய்யாமல், இந்த நீதியான பாதையில் மனிதனை வழிநடத்துகிறார்
50. மனிதன் தன்னிடம் கேட்கும் அனைத்தையும் கடவுள் கொடுப்பதில்லை, ஏனெனில் மனிதனுக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் தெரியும்
51. மனிதனை தன்னிடமிருந்து வெகுதொலைவில் கொண்டுசெல்லும் உலகச் செல்வங்களை தேவன் வாக்குத்தத்தம் செய்வதில்லை அல்லது கொடுப்பதில்லை.
52. தேவன் தன்னை ஐசுவரியவானாக்க மனிதனிடமிருந்து பணத்தையோ அல்லது எந்த வகையான காணிக்கையையும் கேட்பதில்லை
53. தீய செயல்களை சுயநீதியான கிரியைகள் அல்லது தர்மங்கள் மூலம் சமநிலைப்படுத்தும்படி தேவன் மனிதனுக்கு பரிந்துரைக்கவில்லை.
54. கடவுள் இருதாரம், பலதார மணம், விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, அல்லது பாலியல் ஒழுக்கக்கேடு இவைகளை அங்கீகரிக்க மாட்டார்
55. கடவுள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடையேயான திருமணம் மட்டுமே அங்கீகரிக்கிறார் மற்றும் திருமணத்துக்குப் பின் இவர்களுக்கிடையே பாலுறவை (செக்ஸ்) அசுசிப்படாதது என அறிவிக்கிறார்.
56. தேவன் காமக் கண்ணைக் கூட விபசாரமாகவும் பகைக்கும் இருதயத்தைக் கொலைபாதகமாகவும் கருதுகிறார்
57. தேவன் ஒரு செயல் செய்ய தீர்மானித்த பின்பு அவருடைய இருதயத்தை மாற்றிக்கொள்வதில்லை.
58. கடவுள் அவரது செயல்களுக்காக பின்னர் வருத்தப்படுவதில்லை, ஆனால் தீமை அவருக்கு முன்னால் நிகழும்போது ஆழமாக துக்கப்படுகிறார்
59. தேவன் தம்முடைய பிள்ளைகளைச் சுமக்கிறார்; யாரும் அவரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுமந்து செல்ல வேண்டியதில்லை
60. தேவன் எல்லா அநியாயத்தையும் நீக்கி மனுஷனைச் சுத்திகரிக்கிறார்; அவர் சுத்தம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை
61. கடவுள் மனிதர்களுக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கின்றார்; அவருக்கு மனிதனிடமிருந்து உணவு தேவையில்லை
62. கடவுள் நல்லவர்கள் மற்றும் தீய மக்கள் மீதும் சூரியனை பிரகாசிக்கச் செய்து, மழையை பெய்யச் செய்கிறார்
63. கடவுள் அனைத்து உயிரினங்களுக்கும் சுவாசத்தையும் ஜீவனையும் கொடுக்கிறார்
64. தேவன் பரலோக ஐசுவரியத்தினால் மனுஷனை ஆசீர்வதித்து இருக்கிறார்; பால், நெய் அல்லது விலைமிக்க பொருட்களால் அவருக்கு அபிஷேகம் தேவையில்லை
65. கடவுள் ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்துகிறார், கனம்பண்ணுகிறார்
66. புருஷன் குடும்பத்தில் கூட்டாட்சித் தலைவராகவும், மனைவியை தனது உதவியாளராகவும் கொண்டு கடவுள் ஒரு படிநிலையை அமைத்துள்ளார்
67. பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனம்பண்ணவும், கர்த்தருக்குள் எல்லாவற்றிலும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் தேவன் கட்டளையிடுகிறார்
68. புருஷன் திருமணத்திற்குப் பிறகு தனது தந்தை மற்றும் தாயை விட்டு தனது மனைவியோடு இசைந்திருக்க கடவுள் அறிவுறுத்துகிறார்
69. பூமியில் இருப்பதை விட தனது நீதியான செயல்களால் பரலோகத்தில் ஐசுவரியங்களைச் சேமிக்கும்படி தேவன் மனிதனுக்கு பரிந்துரைக்கிறார்
70. கடவுள் ஒவ்வொரு மனித மொழியையும் புரிந்துகொள்கிறார், அவரை அணுகும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும் கேட்கிறார்
71. தேவன் கர்வமுள்ளவர்களை வெறுக்கிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையை அளிக்கிறார்
72. மாதவிடாயையுடைய பெண்களை கடவுள் தன்னை விட்டும் விலகி இருக்குமாறு கேட்பதில்லை; அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்!
73. தேவன் ஒரு பாவியை நேசிக்கிறார், மனந்திரும்பி தன்னிடம் திரும்பி வரும்படி அவனை அழைக்கிறார்
74. கடவுள் தன்னிடம் வரும் பாவியைத் தழுவிக் கொள்கிறார்; ஒரு தகப்பனாக, அவர் அவனைத் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்
75. எந்தவொரு புனித இடத்திற்கும் புனித யாத்திரை செல்லுமாறு கடவுள் யாரையும் கேட்பதில்லை
76. மனிதன் தவம் செய்து, தன் பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை
77. மனிதன் செய்யும் பாவங்களுக்கான தண்டனையாக மரணத்தை தேவன் அறிவித்தார்
78. ஜீவன் இரத்தத்தில் இருப்பதால் பாவமன்னிப்புக்காக இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று தேவன் அறிவித்தார்.
79. மனிதனின் பாவங்கள் நீங்குவதற்காக விலங்குகள் அல்லது பறவைகளின் இரத்தம் சிந்தப்படுவதை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை
80. எலுமிச்சை, பூசணிக்காய் அல்லது தேங்காய்களை உடைப்பதன் மூலமோ அல்லது காளைகள், ஆடுகள் அல்லது பறவைகளைக் கொல்வதன் மூலமோ கடவுள் சாந்தப்படுத்தப்படுவதில்லை
81. பாவம் எவ்வளவு கொடியது என்பதை மனிதன் அறிந்துகொள்வதற்காக தேவன் மிருக பலியை ஏற்படுத்தி நிறுவினார்
82. தம்முடைய குமாரனின் நித்திய பலியாவார் என்ற தம்முடைய வாக்குத்தத்தத்தில் மனிதன் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்
83. முழு மனிதகுலத்தின் பாவ நிவாரணத்திற்காக கல்வாரியில் தேவன் தம்முடைய சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்
84. தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு என்னும் மனிதரில் சிலுவையில் சகல மனிதவர்க்கத்துக்குமான மரண தண்டனையைச் சுமந்தார்.
85. இயேசு தேவனுடைய குமாரன் என்று வல்லமையுடன் அறிவிக்கும்படி தேவன் கல்லறையிலிருந்து இயேசுவை எழுப்பினார்
86. எதையும் நினைவுகூரும் வகையில் எந்தவொரு பண்டிகையையும் கொண்டாடுமாறு கடவுள் மனிதனுக்குக் கட்டளையிடவில்லை
87. வெள்ளை, காவி, சிவப்பு, அல்லது கருப்பு என தன்னை வணங்குபவர்களுக்கு ஒரு சிறப்பு ஆடைக் குறியீட்டை கடவுள் கோரவில்லை
88. ஆணும் பெண்ணும் அடக்கமாக ஆடை அணியுமாறும், நகைகள் அல்லது விலையுயர்ந்த உடைகளால் தன்னை அலங்கரிக்கக் கூடாது என்றும் கடவுள் அறிவுறுத்துகிறார்
89. தீய பழக்கவழக்கங்களாலும், தீய செயல்களாலும் சிதைக்கப்படாமல், தனது கோவிலாகிய ஒருவரின் உடலை வைத்திருக்குமாறு தேவன் மனிதனுக்குக் கட்டளையிடுகிறார்
90. பூமியில் கடவுளுடைய வாழ்க்கையை வாழத் தொடங்க ஒருவரின் சுய வாழ்க்கையை வாழ்வதை நிறுத்துமாறு கடவுள் மனிதனுக்கு பரிந்துரைக்கிறார்
91. பணம், நல்ல செயல்கள் மற்றும் கொடை ஆகியவற்றைக் கொண்டு லஞ்சம் கொடுக்க மனிதன் எடுக்கும் முயற்சிகளால் கடவுள் ஏமாறுவது இல்லை
92. மற்றவர்கள் இழப்பை அனுபவிக்கும்படியாக கடவுள் சிலருக்கு பாரபட்சம் காட்டுவதில்லை
93. கடவுள் நாடு, இனம், நிறம், சாதி அல்லது மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை
94. தேவன் தம்முடைய நித்திய நோக்கத்தின் உச்சக்கட்டமாக அநேக புத்திரர்களை மகிமையில் கொண்டு சேர்ப்பார்
95. கடவுள் இறுதியில் தீமையை - பிசாசு, அவனது கூட்டாளிகள் மற்றும் தீமை செய்பவர்களை - எரி நரகத்தில் அழிப்பார்
96. கடவுளே அனைத்து துதி, ஸ்தோத்திரம், ஐஸ்வர்யம், வல்லமை, ஞானம், புகழ், ஆராதனை, கனம், மகிமை, வல்லமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு தகுதியானவர்
97. கடவுள் பெரியவர், அற்புதமானவர், ஒப்பிடமுடியாதவர், அவர் யாருடனும் போட்டியிட வேண்டியதில்லை
98. எவர்கள் விசுவாசம் கொண்டு, அவரையே முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு கடவுள் நற்பலன் வழங்குபவராக இருக்கின்றார்
99. தேவன் இரக்கமும், உருக்கமும், நீடிய பொறுமையும், சாந்தகுணமும், கிருபையும் சத்தியமும் நிறைந்தவர்.
100. தேவன் தம்முடைய பரிசுத்தத்தைப் பற்றி வைராக்கியமுள்ளவர், அவருடைய குணத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்
101. தேவன் தம்முடைய குணத்திற்குப் பொருத்தமான எல்லாவற்றையும் செய்ய முடியும்; கடவுளால் முடியாதது எதுவுமில்லை
102. கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்ய முடியும், ஏனெனில் அவர் இயற்கையைப் படைத்தார்
103. கடந்த காலத்தில் அவருடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பல யுகங்களில் பேசிய தேவன், இறுதியில் தம்முடைய குமாரன் மூலமாய்ப் பேசியிருக்கிறார்.
104. நம்முடைய எண்ணங்களையும், பேசப்படுவதற்கு முன்பாக நாம் பேசும் வார்த்தைகளையும் தேவன் அறிவார்.
105. கடவுள் தூங்கவோ, மூர்ச்சையடையவோ, உரங்கவோ மாட்டார்; அவர் சோர்வடைவதில்லை அல்லது பலவீனமாக உணர்வதில்லை
106. தேவன் தம்முடைய பரிசுத்தவான்கள், தூதர்கள், தீர்க்கதரிசிகள் ஆகியோரின் அநீதியான, அசிங்கமான செயல்களை அங்கீகரிப்பதில்லை.
107. தேவன் கொலைகாரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பரலோகத்தையும், மதுவையும், பெண்களையும் வெகுமதியகக் கொடுப்பதில்லை.
108. அப்பாவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான போர், துஷ்பிரயோகம் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை கடவுள் அங்கீகரிப்பதில்லை
109. தேவன் தம்முடைய ஜனங்களைப் அழைத்தெடுத்துக் கொள்ள தம்முடைய குமாரனுக்குள் வருகிறார், அவர்கள் என்றென்றைக்கும் அவரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்
110. தேவன் தம்முடைய ஜனங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணி, அந்த ஸ்தலத்திற்குத் தம்முடைய ஜனங்களை ஆயத்தம்பண்ணுகிறார்.
111. தம்முடைய விசுவாசிகளில் ஒவ்வொருவரும் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் முழு வளர்ச்சிக்கு ஏற்ப மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
112. நிச்சயமாக கடவுள் மனிதர்களுடன் நடந்து கொள்வதில் நேர்மையானவராக இருக்கின்றார்; அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கணக்குப் வைத்திருக்கிறார்
113. தேவன் திக்கற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவைகளுக்குப் பெரிய துணையாகவும் இருக்கிறார்; கடவுள் அவர்களைக் கைவிடமாட்டார்.
114. கடவுள் மனிதர்களின் மீறுதல்களை மன்னிக்கிறார், அவர்களுடைய பாவங்களை இனி நினைவுகூரமாட்டார்.
115. தேவன் தம்முடைய ஜனங்களுக்குத் துன்பத்தையும் வேதனையையும் உபத்திரவத்தையும் உண்டாக்குகிறவர்களைப் பழிவாங்குகிறார்
116. தேவன் தம்முடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுகிற யாவருக்கும் உணவளிக்கிறார், உடுத்துகிறார்.
117. தேவன் ஒரு நீதியான நியாயாதிபதி, துன்மார்க்கர்மேல் ஒவ்வொரு நாளும் கோபங்கொள்கிறவர்
118. கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மீது கடவுளுடைய கோபம் வருகிறது
119. தேவன் பட்சிக்கிற அக்கினியாவார்; அவர் பொறாமையுள்ள தேவன், அவருடைய சத்துருக்களை பழிவாங்குகிறார்
120. தேவன் கடுங்கோபம்கொண்டு, தம்முடைய சத்துருக்களைப் பழிவாங்குவார்
121. தேவன் தம்முடைய ஜனங்களை இரட்சிக்க அவர்களுக்காக அவர்களுடைய சத்துருக்களுக்கு எதிராகப் போராடுகிறார்
122. தேவன் அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறார், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையானவர்
123. நாம் அவருக்கு விசுவாசமற்றவர்களாக இருந்தாலும் தேவன் உண்மையுள்ளவர்
124. தேவன் மரித்தோருடைய தேவன் அல்ல, ஜீவனுள்ளவர்களின் தேவன்.
125. கடவுள் குழப்பத்தை உருவாக்குபவர் அல்லர்; அவர் சமாதானத்தின் கடவுள்
126. மக்கள் நன்மை செய்து பகிர்ந்து கொள்ளும்போது கடவுள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்
127. கடவுள் விலங்குகளை விட மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்
128. கடவுள் தலைமுடி, மாவு, கொழுக்கட்டை, இனிப்புகள், அல்லது பிற உணவுப்பொருட்களை காணிக்கைகளாகக் கோருவதில்லை; அவர் மனிதனின் இதயத்தை விரும்புகிறார்
129. கடவுள் எந்த வகையான உணவையும் தடை செய்யமாட்டார்; எல்லாம் நன்றியுடன் பெறப்பட வேண்டும்
130. கடவுள் மிகவும் பயப்படத்தக்கவர்; அனைவரும் பயபக்தியோடு அவரை பணிந்துகொள்ளவேண்டும்

இந்தப்பட்டியல் இன்னும் வளரும்...

பைபிள் சொல்லும் கடவுள், மதங்களின் கடவுளல்ல
Topic
The God of the Bible
Category
Doctrine
bottom of page