இயேசு அரசாளுகிறார்
கட உள் தான் கடவுள்
நீங்க கடவுள நம்புரவங்களா? அப்பிடீனா தொடர்ந்து படீங்க.
(இந்த செய்திய ஆடியோவா கேக்கணுமின்னா https://www.jesusreigns.in/live என்கிற இந்த லிங்க்க க்ளிக் பண்ணுங்க)
காலத்தினுள்ளே கடந்து வந்தவருதான் கட உள்.
சரித்திரத்தினுள்ளே கடந்துவந்தவருதான் கட உள்.
மனுசருக்குள்ளே கடந்து வந்தவருதான் கட உள்.
மனுசரின் உள்ளத்திலே கடந்து வர விரும்புறவருதான் கட உள்.
காலம், இடம், பொருள் இந்த எல்லாத்தையும் கடந்து நிக்கிறவர் தான் கடவுள். சூரியன் சந்திரன் நட்சத்திரங்களைக் கொண்டுதான் நாம காலத்த கணிக்கிறோம். இவைகள படச்ச கடவுள் காலத்துக்கு முன்னாடியே இருந்திருக்க வேணும். இல்லையா? நம்ம பூமியப் படச்சக் கடவுள், இந்த இடத்துக்கும் முன்னாடியே இருந்திருக்க வேணும்தானே? நாம பாக்குற எல்லா இயற்கை பொருட்களும் இருப்பதற்கு முன்னாடியே கடவுள் இருந்திருக்க வேணும், சரிதானே?
இந்தக் கடவுள்தான் மனுசனையும் படச்சாரு. மனுசன் இந்த பூமியில நல்லா வாழ அவனுக்கு சில விதிகளயும் விதிச்சாரு. மனுசன் அவரோட படைப்பு. அவருக்குதான் எது மனுசனுக்கு நல்லது அல்லது தீமையானதுன்னு தெரியுமே. அதனாலதான்.
ஆனா, மனுசனுக்கு கடவுளோட நிழல்ல வாழ பிடிக்கல. அவரோட கட்டுக்குள்ள இருக்கப் பிடிக்கல. நானே வாழ்ந்துக்குறேன் அப்படீனு நெனச்சான். அவரு விதிச்ச விதிகளை மீறுனான். கடவுளோட விதிகள மீறுகிறதுதான் பாவம். பாவத்துனால வந்ததுதான் சாவு. கடவுள்கிட்டேருந்து மனுசன பிரிச்சது இந்த பாவந்தான். இன்னைக்கும் மனுஷன் 'நான் தான் கடவுள்" ங்கிர நெனப்புலதான் வாழ்ந்திட்டு இருக்கான். சிலர் கடவுளே இல்லன்னும் சொல்லி தங்களயே ஏமாத்திக்கிறாங்க.
அதே நேரத்துல கடவுளோட புண்ணியம் வேணுங்கிர ஆசையும் நம்மில் பலர்கிட்ட இருக்கு. கடவுளோட புண்ணியத்த சம்பாதிச்சுக்க நாம என்னென்னமோ செய்யுறோம். கோயில் கொளமுன்னு சுத்திக்கிட்டிருக்கோம். சாமி கும்பிடறோம். குலதெய்வத்துக்கு ஆடு வெட்டுறோம். காசிக்கு போறோம். கங்கையில முங்குறோம். சிலர் மெக்கா போறாங்க. சிலர் வேளாங்கன்னி போறாங்க. சிலர் இஸ்ரவேல்கூட போறாங்க. ஆனா இதெல்லாம் மனுசனோட வீண் முயற்சிதான் அப்படீங்கறது அப்பறமாதான் புரியுது. ஏன்னா இவ்வளோ செஞ்சும் கடவுளோட புண்ணியம் கெடச்ச நிச்சயமோ திருப்தியோ நிம்மதியோ இல்லவே இல்ல. இத புரிஞ்சுக்கிறதுக்குள்ள பலரோட ஆயுசே முடிஞ்சிருது. இருக்கறவங்க இன்னும் தேடிக்கிட்டுதான் இருக்காங்க.
மனுசன் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் இன்னொரு உயிர் சாகவேணும் என்பதாலேயே, மிருகவதை எதிர்ப்பாளர்கள் குங்குமம் இட்ட தேங்காயும் பூசணியும் உடைக்கிறாங்க. ஆகமொத்தம் ரத்தம் சிந்தணுமாம். ஆனா இது கடவுள் செஞ்ச வழிக்கு மாற்றுதானே தவிற கடவுளாவே பரிஞ்சுரைச்ச வழி இல்ல. ரத்தம் சிந்தணும்தான். ஆனா மனுஷன் செஞ்ச பாவங்களுக்கு பரிகாரம் இன்னொரு மிருகமோ தேங்காய் பூசணி எலுமிச்சையோ அல்ல. கடவுளே மனுசனா வந்து ரத்தம் சிந்தி உயிர் கொடுப்பதுதான் அவர் பண்ணின வழி. இதுக்காகத்தான் கடவுள் மனுசருக்குள்ளே மனுசனாய் அவதரிச்சாரு. மனுசன முடிவில்லாத நரக தண்டனயிலிருந்து முற்றுமா விடுவிக்க வந்த இவருக்கு ஈசன்னு பேரு. இவரத்தான் பல மொழிகள்ல ஈஷ் ன்னும் ஈசுவரன்னும் ஈசான்னும் இயேசுன்னும் சொல்லறாங்க. ரமேசு சுரேசு விக்கினேசு சதீசு கணேசு ங்கிர பேரெல்லாம் இந்த இயேசுங்கிர பேர வச்சு சொல்லறதுதான். இந்த ஈசன்தான் வானத்திலேர்ந்து நம்ம பூமிக்குள்ள கடந்துவந்த கட உள். பரத்திலிருக்குற தெய்வத்தோட திருவுருவம் இந்த ஈசன்தான். இவருக்கு தெய்வ வார்த்தைன்னும் தேவமகன்னும் பேரு உண்டு.
பாவமில்லாம பிறந்து வாழ்ந்தவரு இவர் ஒருத்தர்தான். இந்த உலகத்து மனுசர்மேல அளவில்லாத அன்பு வச்சதினாலதான் மனுஷன் செஞ்ச பாவங்களுக்கான தண்டனைய அவரே ஏத்துக்கிட்டாரு. ஆடு மாடு சிந்துர ரத்தமில்ல, இவரு சிந்தின ரத்தந்தான் என்னோட பாவங்களுக்கு பரிகாரமின்னு நம்பி இந்த கடவுள்கிட்ட வந்தா, அவரு நம்மள தாவி அணச்சுக்குவாரு. நாம கடவுளோட நல்லுறவுக்குள்ள வந்து அவரு குடுக்குற விலையேறப்பெற்ற வாழ்வ விலையில்லாம நாம பெற்றுக்கொள்ள வழிசெஞ்சவரு இந்த ரட்சகர்தான்.
இந்த ஈசன்தான் இரண்டாயிரம் வருஷங்கள் முன்னாடி வந்த ‘உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி’. இவரு சிலுவைமரத்தில செத்தாரு - உங்களுக்காகவும் எனக்காகவும்தான். கடவுள்ங்கிறதுனால செத்து அடக்கம்பண்ணப்பட்டவரு, மூணாம் நாள்ல உயிரோடெழுந்தாரு. அவரு குடுக்குற உயிர நாம பெற்றுக்கிறதுதான் மறுபடியும் பிறக்கறது. இந்த வாழ்வ அவர்கிட்ட இருந்து அடஞ்சவங்க இந்த பூமியில கடவுளுக்கு பிரியமா வாழ முடியும்.
உயிர்த்தெழுந்த ஈசன் தம்மேல விசுவாசமும் நம்பிக்கையும் வச்ச தன்னோட சீடர்கள்கிட்ட சொன்னாரு, “நான் இப்ப உங்கள விட்டுட்டு போறேன். ஆனா, திரும்பி வருவேன். அதுவரைக்கும் என்னோட ஆவியில உங்ககூடவே இருப்பேன். கடவுளோட ஆவி உங்ககிட்ட இருக்கறதுனால நீங்க தைரியமா போயி இந்த பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு, பாவ விமோசனம் பத்தின நற்செய்திய எல்லாருக்கும் சொல்லுங்க. என்ன விசுவாசிச்சு என்கிட்ட வர்றவங்கள நான் ஏத்துக்குவேன். ஜாதி மாதம் மொழி வித்தியாசம் இல்லாம எல்லாரையும் ஏத்துக்குவேன்” ன்னு சொல்லிட்டு போயிருக்காரு. அவரு திரும்பி வரும்போது என்னவெல்லாம் நடக்குமின்னு சொன்னரோ அதெல்லாம் இப்போ நடந்துகிட்டு இருக்கு. அதனால அவரு சீக்கிரம் வந்துருவாரு. எதுக்கு? நம்மள அவரோடு கூட்டீட்டு போகத்தான். அவர் இப்போ இருக்குற பரலோகத்துக்கு போவோம் நிச்சயமா.
கடவுள் வகுத்த இந்த வழி உங்களுக்கு வேணுந்தானே? அப்போ நீங்க செய்யவேண்டியதெல்லாம் ‘ஆமா நான் கடவுள விட்டுட்டு வேற வழியில போய்க்கிட்டிருந்த பாவியான ஆள்தான்” ன்னு ஒத்துகிடனும். “கடவுளே, என் பாவங்களுக்கான பரிகாரம் நீங்க பண்ணீட்டீங்க. சிலுவயில மரிச்ச தேவகுமாரன் என்னுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தினாரு, உயிரக்குடுத்தாரு, என்னோட தண்டனைய ஏத்துக்கிட்டாரு. என்ன மன்னிச்சு ஏத்துக்குங்க” ன்னு மனம்நொந்து திரும்பி வாங்க. “இதுவர நான் வாழ்ந்த பொல்லாத வாழ்க்கை போதும். இனி ஒரு புது வாழ்வு எனக்கு வேணும். நீங்கதான் இந்த முடிவில்லாத வாழ்வ தரமுடியும்னு நம்புரேன். என்னுடைய உள்ளத்துல கடந்து வாங்க. உங்க கோயிலா என்னோட உடலையும் உள்ளத்தையும் தர்றேன். இனிமே உங்களுக்காகமட்டுமே வாழுவேன். இந்த பாவ வாழ்விலிருந்து விமோசனம் தாங்க” ன்னு அர்ப்பணிச்சுருங்க. அவ்வளோதான்.
இதப்பத்தி இன்னும் நெரையா தெரிஞ்சுக்கணும்னா, எங்ககிட்டயோ இல்ல உங்க பக்கத்திலிருக்குற ஈசனின் விசுவாசிககிட்டாயோ பேசுங்க. கடவுளோட புண்ணியம் உங்களுக்கு சத்தியமா கிடைக்கும்
என்னோட முதல் புத்தகத்திலே இதப்பத்தி இன்னும் எழுதி இருக்கேன். ஆனா,இங்கிலீஷு லதான் இருக்கு. படிக்க இந்த லிங்க்க கிளிக் பண்ணுங்க: https://www.jesusreigns.in/abhot .